என்னுடம் புகைப்படம் எடுக்க கெஞ்சினார்! டிரம்பை விளாசி எடுத்த மெலொனி
தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இத்தாலிய பிரதமர் கெஞ்சினார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்து
சமீபத்தில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடியதாக இத்தாலிய செய்தி நிறுவனமான La7 தொலைக்காட்சியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

பரிதாபப்பட்டு அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் அவருடன் பேச வேண்டிய தேவை இல்லை, இருந்தும் பேசினேன். இதனால் அவர் மகிழ்ச்சியடைந்து இருப்பார் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.
இத்தாலி கடும் கண்டனம்
இந்நிலையில் டிரம்பின் கருத்தை இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி முழுமையாக மறுத்ததுடன் கடுமையாக கண்டனமும் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் கருத்துகள் கற்பனையானது, பொய்யானது மற்றும் இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
Io e l’Italia non imploriamo mai. pic.twitter.com/sTpKlqWB67
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 19, 2026
மேலும் இது தொடர்பாக இத்தாலிய பிரதமர் மெலோனி காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் நானும், இத்தாலியும் எப்போதும் கெஞ்சுவதில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிரம்பின் கருத்துகள் இத்தாலிய மக்களை புண்படுத்த கூடியது என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வாரம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தையும் திடீரென ரத்து செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |