மெலோனி-ட்ரம்ப் இடையே வெடித்துள்ள மோதல்., இத்தாலிய பிரதமரின் காட்டமான பதிலடி
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையே அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக கடும் வார்த்தை மோதல் உருவாகியுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்த பின்னர், ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களில் மெலோனி தன்னுடன் “புகைப்படம் எடுக்க வேண்டி பலமுறை கெஞ்சி கேட்டார்” என்று தெரிவித்தார். மேலும், அவர் இத்தாலியில் தனது பிரபலத்தன்மை குறைந்து வருவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மெலோனி, “உங்களுடனான உறவைப் பொறுத்து என் பிரபலத்தன்மை இல்லை, குறிப்பாக உங்கள் நண்பராக இருப்பது எனது பிரபலத்தன்மைக்கு நிச்சயமாக உதவவில்லை.
எனது புகழ் குறித்து உங்களுக்கு கவலை வேண்டாம். உங்களுடையதில் மட்டும் கவனம் செலுத்த பரிந்துரைக்கிறேன்” என்று கடுமையாக தாக்கினார்.

மேலும், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நானோ இத்தாலியோ அல்லது இத்தாலி எப்போதும் யாரிடமும் பிச்சை கேட்டதில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ட்ரம்ப், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இத்தாலி விமான தளங்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் “பெரும் சிரமம் ஏற்பட்டது” என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால் மெலோனி, “அரசாங்க ஒப்பந்தங்களின் அடிப்படையில் மட்டுமே தளங்கள் பயன்படுத்தப்படும். நான் பிரதமராக இருக்கும் வரை அவை மீறப்படாது” என்று விளக்கம் அளித்தார்.
இந்த வார்த்தை மோதல் இரு நாடுகளின் உறவுகளில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் விளைவாக, இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மெலோனியின் கருத்துக்கு இத்தாலி அரசியல் வட்டாரங்களில் பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. இரு தலைவர்களும் முன்பு நெருக்கமான உறவை பேணியிருந்தாலும், சமீபத்திய நிகழ்வுகள் அந்த உறவை சீர்குலைத்துள்ளன.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |