பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு பதின்மவயதினர் இருவர் பலியாகியுள்ள நிலையில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் மூளைக்காய்ச்சல்
இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், இரண்டுபேர், மெனிஞ்சைட்டிஸ் (meningitis) என்னும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள்.

Canterbury நகரில், Club Chemistry என்னும் இரவு விடுதி ஒன்று உள்ளதாம். மாணவர்களிடையே பிரபலமான அந்த விடுதிக்குச் சென்ற, பாதிக்கப்பட்ட யாரிடமிருந்தோ இந்த மூளைக்காய்ச்சல் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
விடயம் என்னவென்றால், இந்த மூளைக்காய்ச்சல் பரவிய நேரத்தில் அங்கு சுமார் 2,000 பேர் சென்றுள்ளார்கள்.
ஆகவே, அந்த பகுதியிலுள்ள மாணவ மாணவியருக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
20 ஆக உயர்வு இந்நிலையில், பிரித்தானியா முழுவதிலும், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக பிரித்தானிய சுகாதாரச் செயலர் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இந்த தொற்று பரவல் திடீரென உருவாகியுள்ளதால், மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி ஸ்டாக் இல்லை என தேசிய மருந்தக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எப்போது மீண்டும் தடுப்பூசி கிடைக்கும் என்பதும் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிலேயே வயதில் குறைந்தவர், ஒன்பது மாதக் குழந்தையான நலா ரோஸ் ( Nala-Rose Fletcher) என்னும் குழந்தைதான்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நலாவுக்கு, விரைவில், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில், ஜூலியட் (18) என்னும் பள்ளி மாணவியும், 21 வயது கல்லூரி மாணவர் ஒருவரும் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |