ரஷ்யாவுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ளும் மற்றொரு கூலிப்படை: புடினுக்கு மேலும் ஒரு பின்னடைவு
ஏற்கனவே வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இறங்கிய விடயம் புடினுக்கு ஆத்திரத்தை மூட்டிய நிலையில், மற்றொரு கூலிப்படையும் புடினுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய பிடியிலிருந்த பகுதிகளை மீட்கும் உக்ரைன்
கடந்த வாரம், அதாவது, ஆகஸ்ட் மாதம், 28ஆம் திகதி, ரஷ்யாவின் பிடியிலிருந்த Robotyne என்னும் கிராமத்தை மீட்டுவிட்டதாக உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சரான Hanna Maliar அறிவித்தார்.
உண்மையில், Robotyne என்பது சுமார் 500 பேர் மட்டுமே வாழும் ஒரு சிறு கிராமம் தான். அதை மீட்டது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றும் அல்ல.
பின்னணியில் மற்றொரு கூலிப்படை
ஆனால், விடயம் என்னவென்றால், உக்ரைன் அமைச்சரின் அறிவிப்புக்கு முன், மற்றொரு முக்கிய விடயம் நடந்தது. அது என்னவென்றால், Robotyne கிராமத்தில் முகாமிட்டிருந்த, வாக்னர் கூலிப்படையைப் போன்ற, ஆனால், சற்று சிறிய கூலிப்படையான Rusich எனும் ரஷ்ய ஆதரவு கூலிப்படையினர் அதற்கு சற்று முன்தான் தாங்கள் ஆயுதங்களைக் கைவிட இருப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார்கள்.
ஆக, Robotyne என்னும் கிராமம் மீட்கப்பட்டதற்கு Rusich கூலிப்படையினரின் இந்த முடிவு காரணமாக இருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
ஏற்கனவே வாக்னர் கூலிப்படையின் ஆதரவை கிட்டத்தட்ட புடின் இழந்துவிட்ட நிலையில், தற்போது மற்றொரு கூலிப்படையும் ஆயுதங்களைக் கைவிட இருப்பதாக அறிவித்துள்ள விடயம் புடினுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
Rusich கூலிப்படையினர் ஆதரவை விலக்கிக்கொள்ள என்ன காரணம்?
இதற்கிடயில், Rusich கூலிப்படையினர் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதன் பின்னணியும் வெளியாகியுள்ளது.
அதாவது, Rusich கூலிப்படையின் மூத்த தளபதிகளில் ஒருவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான Yan Petrovsky என்பவரை பின்லாந்து பிடித்துவைத்துள்ளது. அவரை உக்ரைனுக்கு நாடுகடத்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது.
அதாவது, Rusich கூலிப்படையின் மூத்த தளபதிகளில் ஒருவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான Yan Petrovsky என்பவரை பின்லாந்து பிடித்துவைத்துள்ளது. அவரை உக்ரைனுக்கு நாடுகடத்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது.
ஆக, தாங்கள் ஆபத்தான இடத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட, ரஷ்யா தங்களுக்கு உதவவில்லையே என்ற கோபத்தில்தான் Rusich கூலிப்படையினர் ஆயுதங்களை கைவிடுவதாக எச்சரித்துள்ளதாக ஊடகம் ஒன்றிற்கு Rusich கூலிப்படையினரே விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |