திரும்பி நின்ற மெஸ்ஸி! ஓடி வந்து கட்டிபிடித்து உணர்ச்சிவசப்பட்ட தாயார்.. வைரல் வீடியோ
கால்பந்து உலகக் கோப்பை தொடரை அர்ஜென்டினா வென்ற பின்னர் மைதானத்தில் மெஸ்ஸியை தேடி வந்து அவரது தாயார் கட்டிபிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உணர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.
மெஸ்ஸி அபாரம்
2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அபாரமான 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அர்ஜென்டினா வெற்றியை தொடர்ந்து மெஸ்ஸி மைதானத்தில் அங்குமிங்கும் மகிழ்ச்சியில் நடந்தபடி இருந்தார்.
Messi's mother comes and hugs him. A mother's pride #FIFAWorldCup #ARGFRA #WorldCupFinal #Messi? pic.twitter.com/OFo6yuR2eg
— Aristotle ? (@goLoko77) December 18, 2022
தாயார் நெகிழ்ச்சி
அப்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த மெஸ்ஸியின் தாயார் சிலியா மரியா மெஸ்ஸி முதுகை தட்டி அவரை திருப்பினார்.
இதையடுத்து தாயாரை பார்த்து மெஸ்ஸி இன்ப அதிர்ச்சியடைந்த நிலையில் இருவரும் கட்டிபிடித்து கொண்டு மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினார்கள்.