மெஸ்ஸி உலகக் கோப்பையை வெல்வார்! 7 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த நபர்... வைரலாகும் பதிவு
லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை வெல்வார் என 7 ஆண்டுகளுக்கு முன்னரே நபர் ஒருவர் கணித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்னரே கணிப்பு
FIFA கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வென்று சாதனை படைத்துள்ளது. மெஸ்ஸி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான Jose Miguel Polanco என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ம் திகதி தனது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18ம் திகதி 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார்.
Twitter/scotsman
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக
7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளார், அவரின் பதிவு தற்போது பெரியளவில் வைரலாகியுள்ளது.
வெற்றிக்கு பின்னர் Joseன் டுவிட்டர் பதிவில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
December 18, 2022. 34 year old Leo Messi will win the World Cup and become the greatest player of all times. Check back with me in 7 years.
— José Miguel Polanco (@josepolanco10) March 20, 2015
Estuve ahí en tu primer mundial y ahora pude estar en tu último donde tocaste el cielo con las manos, Lio, así como lo hizo Diego. Seré feliz por el resto de mi vida, gracias @Argentina, somos CAMPEONES MUNDIALES pic.twitter.com/NOOMUqxdDd
— José Miguel Polanco (@josepolanco10) December 18, 2022