உலக கோப்பைக்கு பிறகும் தொடர்ந்து விளையாடுவேன்…ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி வழங்கிய லியோனல் மெஸ்ஸி!
கத்தார் 2022ம் ஆண்டின் உலக கோப்பை நாயகனான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகும் தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கோப்பை வென்று அசத்திய அர்ஜென்டினா
2022ம் ஆண்டின் கத்தார் கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று லுசைல் மைதானத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நிறைவடைந்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஆட்டத்தில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் முன்னிலை பெற்றது.
What a game. Worthy of a final. Messi’s moment to remember till infinity. Tough luck Mbappe and France. Congratulations Argentina on winning the #FIFAWorldCup pic.twitter.com/0ZskRbFMYf
— Venkatesh Prasad (@venkateshprasad) December 18, 2022
ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்த பிரான்ஸ் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அர்ஜென்டினாவிற்கு அதிர்ச்சியளித்தது.
90 நிமிட முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் போட்டியில் கூடுதலாக 30 நிமிடங்கள் சேர்க்கப்பட்டது, கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆட்டத்தின் முடிவிலும் இரு அணிகளும் 3-3 என்ற சமமான நிலையில் மல்லுக்கட்ட, பெனால்டி சூட் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற பெனால்டி கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, 1986க்கு பிறகு மீண்டும் வெற்றி கோப்பையை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.
Just look at how happy Lionel Messi is ??
— ESPN FC (@ESPNFC) December 18, 2022
(via @Castro1021) pic.twitter.com/VD0Q1Zzhjy
மீண்டும் மெஸ்ஸி
இந்த உலக கோப்பை போட்டியே தனது இறுதி உலக கோப்பை போட்டி என்று அறிவித்து இருந்த அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, 5 முறை தவறவிட்ட தனது கனவு கோப்பை இந்த ஆண்டு வெற்றிகரமாக நனவாக்கியுள்ளார்.
1986ம் ஆண்டு பிறகு கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணிக்கு லியோனல் மெஸ்ஸி வாங்கி கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், மெஸ்ஸி உலக கோப்பை வென்றது அவரது ரசிகர்களுக்கு ஒரு புறம் அளவற்ற மகிழ்ச்சியை தந்தாலும், இந்த உலக கோப்பையே இறுதி போட்டி என அறிவித்து இருந்த மெஸ்ஸியை இனி களத்தில் பார்க்க முடியாதோ என்ற சோகத்திலும் ரசிகர்கள் மூழ்கி இருந்தார்கள்.
It’s been an absolute privilege to watch Lionel Messi for nearly 2 decades. Moment after moment of spellbinding, breathtakingly joyous football. He’s a gift from the footballing Gods. So pleased that he’s lifted the ultimate prize in our sport. Gracias y felicidades, campeón. pic.twitter.com/XTiZUcovLI
— Gary Lineker ?? (@GaryLineker) December 18, 2022
இந்நிலையில் வெற்றி சூறையாடிய பிறகு லியோனல் மெஸ்ஸி பேசிய போது, “நிச்சயமாக இத்துடன் எனது கால்பந்து வாழ்க்கையை முடிக்க விரும்பினேன், என்னால் இதற்கு மேலும் கேட்க முடியாது! உலக கோப்பையுடன் எனது கால்பந்து வாழ்க்கை முடிப்பது என்பது அற்புதமானது”, “இதற்கு மேல் வேறு என்ன? கோபா அமெரிக்கா, உலகக் கோப்பை என்னிடம் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து முடிந்துவிட்டது.”
“ நான் கால்பந்தை விரும்புகிறேன், நான் என்ன செய்கிறேன். நான் தேசிய அணியின் குழுவில் இருப்பதை விரும்புகிறேன்,” அத்துடன் “ உலக கோப்பை நாயகனாக இன்னும் ஒரு சில போட்டிகளில் தொடர்ந்து விளையாட நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Lionel Messi really took the 'no international trophies' comments personally ? pic.twitter.com/uD0bcYocCg
— ESPN FC (@ESPNFC) December 18, 2022
இது தொடர்பாக அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தெரிவித்த தகவலில், 2026 உலக கோப்பையில் அவருக்கான இடம் எப்போதும் திறந்தே இருக்கும், அவர் அணியில் தொடர்ந்து இருப்பதை நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.