மெட்டா நிறுவனம் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்
மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா முடிவு
மெட்டா நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் ஆகும்.
இது சம்மந்தமான ஆவணம் வெளியாகியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதோடு, ஊழியர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான நோட்டீஸ் இன்று (பிப்ரவரி 10) அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மெட்டா நிறுவனம் தரப்பில், "செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டிற்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க், ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாக வேலை செய்யாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வோம் என்று கூறியிருந்தார்.
கொரோனாவுக்கு பிறகு மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருவதால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |