புதிதாக 6000 பணிநீக்கங்களை அறிவித்த மெட்டா: மொத்தமாக 21,000 பேர் பாதிப்பு
மெட்டா நிறுவனம் தனது புதிய சுற்று பணிநீக்கங்களை புதன்கிழமை முன்னெடுத்துள்ளது.
இரண்டாவது சுற்று பணி நீக்கம்
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் புதன்கிழமை அதன் அடுத்த சுற்று பணிநீக்கங்களை புதன்கிழமை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, தற்போது 6000 தொழிலாளர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளது.
Getty Images
இந்த நடவடிக்கையானது நடப்பு ஆண்டின் செயல்திறன் நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பணத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் நிறுவனத்தின் கட்டமைப்பை சீராக்கவும் மெட்டா நிறுவனம் இந்த மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிநீக்கங்களை ஊழியர்கள் ஏற்கனவே அறிந்து இருந்தனர் என்றும், கடந்த மார்ச் மாதம் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அவரது வலைதளப்பதிவில், சுமார் 10,000 ஊழியர்களை இரண்டு தவணைகளாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாத இறுதியில் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
20 ஆயிரத்தை கடந்த பணி நீக்கம்
10,000 ஊழியர்களை இரண்டு தவணைகளாக பணி நீக்கம் செய்வதாக சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்து இருந்த நிலையில் முதல் தவணையாக ஏப்ரல் மாதத்திலேயே சுமார் 11,000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது இரண்டாம் தவணையான மே மாதத்தில் மேலும் 6000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அத்துடன் மெட்டா நிறுவனம் தங்களது 5000 பணி சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது, மெட்டா நிறுவனத்தின் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் மூலம் சுமார் 21,000 பேர் வரை தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
முதல் பணிநீக்க வரிசையில் தொழில்நுட்ப ஊழியர்கள் இடம் பெற்று இருந்த நிலையில், இரண்டாவது பணிநீக்க வரிசையில் வணிக பிரிவு ஊழியர்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.