AI காரணமாக மெட்டா, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் 20,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனங்கள், 20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
CNBC வெளியிட்ட தகவலின்படி, இது தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய AI மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
மெட்டா, மைக்ரோசாஃப்ட், அமேசான் (Amazon), ஆல்பபெட் (Alphabet) ஆகிய நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டில் AI அடிப்படை வசதிகளுக்காக சுமார் 700 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிட உள்ளன.
இதன் காரணமாக, பொதுவான IT வேலைவாய்ப்புகளை குறைந்து, AI தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

Layoffs.fyi தரவின்படி, 2026ஆம் ஆண்டில் மட்டும் 92,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். 2020 முதல் இதுவரை மொத்தமாக 9 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
AI நிபுணர் ஆன்டனி டகிள் (Anthony Tuggle), “இது தற்காலிக சந்தை மாற்றம் அல்ல. தொழில்துறையில் வேலை அமைப்பு மற்றும் செயல்பாட்டில் நிரந்தர மாற்றம் ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்கள், தொழில்நுட்ப துறையில் AI-க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறைப்புகள், AI வளர்ச்சியின் தாக்கத்தை உலகளாவிய அளவில் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AI #Meta #Microsoft #TechLayoffs #AIShakeUp #JobCuts #FutureOfWork #ArtificialIntelligence