Meta Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடி இந்தியாவில் அறிமுகம்., ஆனால் ஒரு சிக்கல்...
AI வசதிகளுடன் கூடிய Meta Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.
ஆனால், இதற்கான புதிய தனியுரிமை (Privacy) நிபந்தனைகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
"Hey Meta" செயல்படுத்தினால், உங்கள் குரலும் கமெரா தரவுகளும் சேமிக்கப்படும்!
Meta நிறுவனம் சமீபத்தில் தனது தனியுரிமைக் கொள்கையை மாற்றியுள்ளது. இதன்படி, Meta AI-யுடன் உங்கள் பேசும் குரல் now default-ஆக சேமிக்கப்படும், அதனை நிறுத்தும் விருப்பம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், சேமிக்கப்பட்ட தகவல்களை பின்னர் கைமுறையாக நீக்க முடியும்.
மேலும், "Hey Meta" எனும் குரல் கட்டளையை செயல்படுத்தியுள்ளோர், கண்ணாடியில் உள்ள கமெராவும் எப்போதும் இயக்கப்பட்டிருக்கும் என்று Meta தெரிவித்துள்ளது.
புகைப்படங்கள், வீடியோக்கள் எங்கே சேமிக்கப்படும்?
கண்ணாடியில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும்.
ஆனால், அதை Instagram போன்ற Meta பிளாட்பாரங்களில் பகிர்ந்தால் அல்லது AI சேவையை பயன்படுத்தினால், அந்த தரவுகள் Meta-வின் சேவையை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
பயனர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளதா?
Meta கூறுகையில், "Hey Meta" வசதியை முடக்கினால் மட்டுமே, உங்கள் குரல் மற்றும் கமெரா தரவுகள் சேகரிக்கப்படாது.
இந்த அறிவிப்புகள், இந்தியாவின் தனியுரிமை சட்டங்களில் புதிய கேள்விகளை எழுப்பக்கூடியவை. AI வசதிகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறைவாகும் நிலையில், பயனர்கள் தனியுரிமையையும் பாதுகாப்பையும் எவ்வாறு சமன்செய்வார்கள் என்பது முக்கியமான விவாதமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Meta Ray-Ban smart glasses India, Meta AI privacy policy, Hey Meta voice recording, Ray-Ban camera default on, Meta smart glasses launch 2025, India tech privacy concerns, Ray-Ban Meta AI data usage, Meta glasses voice data policy, Ray-Ban wearable surveillance, Meta AI glasses India debut