மாணவனின் மண்டை ஓட்டுக்குள் பாய்ந்த உலோகக் கோப்பு! சக மாணவனின் செயலால் நேர்ந்த விபரீதம்
எகிப்தில் உள்ள பாடசாலையில் நடந்த சிறிய தகராறில் ஈடுபட்ட மாணவர் சக மாணவரின் தலையில் உலோகக் கோப்பை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவரின் தலையில் பாய்ந்த உலோகக் கோப்பு
எகிப்து நாட்டின் மன்சூரா நகரில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் 12 வயது மாணவர் முகமது அந்தர் முகமது. சக மாணவருக்கும் முகமதுவிற்கும் சிறு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது குறித்த மாணவர் உலகக்கோப்பைக் கொண்டு முகமதுவின் தலையில் குத்தியுள்ளார். இதில் உலோகக் கோப்பு 5 சென்டி மீற்றர் அளவுக்கு உள்ளே சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக மாணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
வெற்றிகரமாக அகற்றப்பட்ட உலோகக் கோப்பு
அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர் முகமதுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஐந்து மணிநேர கடினமான அறுவை சிகிச்சைக்கு பின்னர், உலகக்கோப்பு மாணவரின் தலையில் இருந்து அகற்றப்பட்டது.
@Newsflash
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மாணவர் முகமது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், மாணவர்கள் இடையே என்ன வாக்குவாதம் நடந்தது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.