மாடியில் காபி குடித்துக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிய விண்கல்: ஒரு அபூர்வ சம்பவம்
பிரான்சில், தனது வீட்டு மாடியில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணை விண்கல் ஒன்று தாக்கிய அபூர்வ சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பெண்ணைத் தாக்கிய கல்
பிரான்சில் பெண் ஒருவர் மாடியில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருக்கும்போது, அவரது விலாவில் ஏதோ தாக்கியுள்ளது.
அது ஒரு வௌவாலாக இருக்கலாம் என முதலில் நினைத்த அந்த பெண், பிறகு தன் அருகே ஒரு சிறிய கல் கிடப்பதைக் கவனித்துள்ளார்.
வீட்டில் ஓடுகளைப் பதிப்பதற்காக பூசும் சிமெண்ட் காய்ந்து விழுந்திருக்கலாம் என்று எண்ணி, வீடு கட்டும் ஒருவரிடம் அதைக் காட்டியுள்ளார் அவர்.
அறிவியலாளர் கூறிய ஆச்சரிய செய்தி
அந்த வீடு கட்டும் நபர் அந்தக் கல்லைப் பார்த்துவிட்டு, இது ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். உடனே, Dr Thierry Rebmann என்னும் அறிவியலாளரிடம் அந்தக் கல்லைக் காட்டியுள்ளார் அந்தப் பெண்.
அந்தக் கல்லை சோதித்த Dr Thierry Rebmann, அது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளார். அத்துடன், இப்படி மனிதர்கள் விண்கல்லால் தாக்கப்படும் நிகழ்வுகள் அபூர்வம் என்றும் கூறியுள்ளார் அவர்.
இதற்கு முன், 1954ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெண் விண்கல்லால் தாக்கப்பட்டார். ஆனால், அது ஒரு பெரிய விண்கல். 3.6 கிலோ எடையுள்ள அந்த விண்கல்லால் தாக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |