நடுவானில் கோளாறான ஹெலிகாப்டர்... அந்தரத்தில் சுழன்று தரையில் விழுந்து பயங்கர விபத்து! திகிலூட்டும் வீடியோ
வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் நடுவானில் கோளாரான கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hidalgo மாநிலத்தில் உள்ள Agua Blanca பகுதியிலே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
Grace சூறாவாளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட Veracruz மாநில அரசு செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் மெஸிக்கோ கடற்படைக்கு சொந்தமான MI-17 ரக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட மொத்தம் 20 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது நடுவானில் ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்தரத்தில் சுழன்ற ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த வேன் மீது விழுந்த நிலையில், வேன் ஓட்டுநர் விரைவாக வாகனத்தை ஓட்டி சம்பவயிடத்திலிருந்து தப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
A Mexican navy helicopter headed to areas affected by Hurricane Grace crash-landed in the central state of Hidalgo pic.twitter.com/HCfMN6g8se
— Reuters (@Reuters) August 26, 2021
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த Veracruz மாநில கவர்னர், காயமடைந்த அரசு செயலாளர் மருத்துவமனையில் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.