நியூயார்க்கில் பிரம்மாண்ட கப்பல் மோதிய விபத்து: மனவேதனை அறிக்கை வெளியிட்ட மெக்சிகோ ஜனாதிபதி
அமெரிக்காவின் ப்ரூக்ளின் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு, மெக்சிகோ ஜனாதிபதி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மெக்சிகோ பயிற்சி கப்பல்
நியூயார்க் நகரின் பிரபல ப்ரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கடற்படையின் பயிற்சி கப்பல் மோதியது.
160 அடி உயரமுள்ள பிரம்மாண்ட குவாஹ்டெமோக் கப்பல் ஏற்படுத்திய இந்த விபத்தில், இருவர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவத்திற்கு மெக்சிகோவின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) இரங்கல் தெரிவித்துள்ளார்.
வருத்தமடைந்துள்ளோம்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியூயார்க் துறைமுகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்த குவாஹ்டெமோக் பயிற்சி கப்பலின் இரண்டு பணியாளர்களின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.
எங்கள் அனுதாபமும், ஆதரவும் அவர்களின் குடும்பங்களுக்கு உரித்தாகட்டும். நமது சக குடிமக்களுக்கு அளித்த அனைத்து ஆதரவிற்கும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸுக்கு நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம், கடற்படை தொடர்ந்து தகவல்களை வழங்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது காயமடைந்தவர்களை கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கவனித்துக் கொள்வதையும், அமெரிக்க மற்றும் மெக்சிகன் துணைத் தூதரகம் ஆகியவையும் கடற்படைக்கு ஆதரவளித்து வருவதையும் உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |