எதிர்காலம் தேடி புலம்பெயரும் பெண்கள்... எல்லையில் கடத்தப்பட்டு சீரழிக்கப்படும் கொடூரம்
அமெரிக்காவை நோக்கி புலபெயரும் பெண்கள் பலர் சமீப மாதங்களாக மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குழுக்களிடம் சிக்கி சீரழிவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொகை கேட்டு மிரட்டுவதாக
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் மெக்சிகோவின் Reynosa மற்றும் Matamoros ஆகிய நகரங்களையே பயன்படுத்துகின்றனர்.
@washingtonpost
ஆனால் தற்போது மெக்சிகோவின் சட்டவிரோத குழுக்கள் இந்த புலம்பெயர் மக்களில் தனியாக சிக்கும் பெண்களை கடத்தி மீட்க தொகை கேட்டு மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணம் அளிக்க தாமதமானால், கூட்டாக சீரழிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர் பெண்கள் சீரழிக்கப்படுவது தொடர்பில் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் மற்றும் ஒரு டசின் உள்ளூர் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசாங்க தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், புலம்பெயரும் மக்களுக்காக ஜோ பைடன் நிர்வாகம் CBP One என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் பதிவு செய்து, உரிய முறைப்படி அமெரிக்காவுக்குள் நுழைய முடியும்.
@washingtonpost
ஆனால் தினசரி 1,450 பேர்களுக்கு மட்டுமே இந்த செயலில் பதிவு செய்ய முடியும், இருப்பினும் நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாய்ப்புகாக போராடி வருவதாகவே கூறப்படுகிறது.
CBP One செயலி
இதுவரை CBP One செயலியில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 250,000 எனவும் கூறப்படுகிறது. தற்போது சிகாகோவில் வசிக்கும் கரோலினா என்பவர் தமக்கு நடந்த துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த மே மாதம் 26ம் திகதி தமது 13 வயது மகனுடன் பேருந்து ஒன்றில் Reynosa நகருக்கு சென்றுள்ளார்.
பேருந்து அங்குள்ள நிலையத்தில் வந்து சேர்ந்ததும் ஆண்கள் பலர் அந்த பேருந்தை மொய்த்துக்கொண்டதாகவும், அவர்களின் ஒப்புதலின்றி அந்த பகுதிக்கு சென்றிருக்க கூடாது என மிரட்டியதாகவும் கரோலினா தெரிவித்துள்ளார்.
@washingtonpost
இந்த நிலையில், அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கரோலினா வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கே பணம் கேட்டு மிரட்டப்பட்டதாகவும், ஆண்கள் சிலரால் சீரழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் குடும்பத்தினர் அந்த குழுவினருக்கு 3,100 டொலர் தொகையை கைமாறிய பின்னரே, தம்மை விடுவித்ததாகவும் கரோலினா தெரிவித்துள்ளார். ஈக்வடார் பெண் ஒருவர் தெரிவிக்கையில் Reynosa நகரில் தாம சிறைபிடிக்கப்பட்ட நிலையில் போதை மருந்து விநியோகிக்கும் நபரால் தாம் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பல பெண்கள் தொடர்புடைய குழுக்களிடம் சிக்கி சீரழிக்கப்பட்டாலும் இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் பொலிசாரை நாடி புகார் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |