சீனா உட்பட பல நாடுகளுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நாடு - இந்தியாவிற்கும் பாதிப்பு
வட அமெரிக்க நாடொன்று சீனா உட்பட பல நாடுகளுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
மெக்சிகோ நாடாளுமன்றம், சீனா உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரி விதிக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்த நடவடிக்கை, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு போட்டியை கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிகள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும். உலோகங்கள், கார்கள், ஆடைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட 1,400-க்கும் மேற்பட்ட பொருட்கள் இதில் அடங்கும்.

மெக்சிகோவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இல்லாத இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படுகின்றன.
சீனாவின் வர்த்தக அமைச்சகம், இந்த நடவடிக்கை “வர்த்தக கூட்டாளிகளின் நலன்களை கடுமையாக பாதிக்கும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மெக்சிகோ தனது முடிவை திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
சமீப ஆண்டுகளில், BYD, MG போன்ற சீன கார் நிறுவனங்கள் மெக்சிகோவில் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளன. ஆனால், சீனா மெக்சிகோவை பயன்படுத்தி அமெரிக்காவின் வரிகளை தவிர்க்க முயல்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், மெக்சிகோ அரசு, அமெரிக்காவுடன் புதிய வரி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம், மெக்சிகோவிலிருந்து வரும் எஃகு, அலுமினியத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், fentanyl போதைப்பொருள் கடத்தலைத் தடுக்காததால், கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அதோடு, ரியோ கிராண்டே ஆற்றின் நீர் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி, மெக்சிகோவிற்கு 5 சதவீதம் புதிய வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள், மெக்சிகோ-அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக உறவுகளை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mexico 50 percent tariffs China 2026, Mexico new trade policy January 2026, Claudia Sheinbaum tariff decision, Mexico US trade talks Donald Trump, Mexico import duties metals cars clothing, China reaction Mexico tariffs, Mexico India Indonesia Thailand trade impact, US Mexico steel aluminium tariff dispute, Rio Grande water treaty Trump tariff threat, Global trade tensions Mexico tariffs