தன்னை துஷ்பிரயோகம் செய்த நபரை கொன்ற இளம்பெண்: அவருக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் தண்டனை
மெக்சிகோவில் தன்னை துஷ்பிரயோகம் செய்த நபரை கொன்ற இளம்பெண்ணுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதமும் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் துஷ்பிரயோகம்
மெக்சிகோ நாட்டின் நிஹல்கொயொல்ட் நகரை சேர்ந்த ரொக்ஸ்னா ருயிஸ்(23) என்ற இளம்பெண்ணுக்கு, திருமணமாகி இரு குழந்தை இருக்கிறது.
இவர் கணவர் இன்றி வசித்து வந்த இவர் ஒரு துரித உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தான் வசிக்கும் பகுதியில் இன்னொரு நபரோடு நட்பு முறையில் பழகி வந்துள்ளார்.
@efe
இந்நிலையில் ஒரு நாள் இருவரும் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
கொலை வழக்கு
இதனிடையே ருயிஸ் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அந்த நபர் ருயஸை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் கடுமையாக தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
@EL UNIVERSAL
பின்னர் அந்த நபரை மூட்டையில் கட்டி இரவோடு இரவாக இழுத்து சென்று சாலையில் வீசி உள்ளார். அப்போது ரோந்து பணியிலிருந்த பொலிஸார் ருயிஸை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த இந்த வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பெண் தற்காப்பை மீறி கடுமையாக தாக்கியதால் அந்த நபர் உயிரிழந்திருக்கிறார்.
வெடித்த போராட்டம்
எனவே அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிவாரணத்திற்காக 16000 டொலர்கள் வழக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு மெக்சிகோ முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது, மேலும் பலரும் பெண் துஷ்பிரயோகப்படுத்தப்படும் போது தற்காப்பிற்காக கொலை செய்ததற்கு தண்டனையா? என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடு முழுதுவதும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர், நடத்திய தொடர் போராட்டத்தின் முடிவில், இந்த தீர்ப்பு திரும்ப பெறப்பட்டு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.