சுற்றுலா பயணிகளுடன் அந்தரத்திலிருந்து ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்!
ரஷ்யாவில் சுற்றுலா பயணிகளுடன் பயணித்த ஹெலிகாப்டர் எரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kronotsky பாதுகாக்கப்பட்ட பகுதியல் உள்ள Kuril ஏரியில் Mi-8 ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக அவசர சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர், இதில் ஒரு குழந்தை உட்பட 13 சுற்றுலா பயணிகள், 3 குழுவினர் அடங்குவர்.
இதில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவசர சேவை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. அதேசமயம், மருத்துவ மற்றும் அவசர சேவை குழுவினருடன், Kamchatka Vladimir Solodov விபத்து நடந்த இடத்திற்கு புறப்பட்டுள்ளார்.