IPL 2024 : Play-off சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்
2024 ஆண்டிற்கான IPL போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் Play-off சுற்றில் இருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது.
Play-off சுற்றில் வெளியேறிய MI
IPL தொடரில் நேற்று 57 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்து ஆடியது.
அதில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 166 ஓட்டங்களை இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கிடைத்தது.
புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் மும்பை, 12 போட்டிகளில் விளையாடி 8-ல் தோல்வியடைந்து 4 இல் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் LSGக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன.
இந்த இரண்டிலும் வெற்றி பெற்றாலும் 12 கிடைக்கும். அதேசமயம் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் இன்னும் 3 போட்டிகளில் விளையாடவுள்ளது. மூன்றிலும் வெற்றி பெற்றால் 14 ஆக உயரும்.
ஆனால் இந்த ஆண்டு IPL போட்டியில் Play-off சுற்றில் இருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |