முற்றிலும் சிதைக்கப்பட்ட இரண்டு Mi-8 ஹெலிகாப்டர்: 6 உக்ரைனிய வீரர்கள் உயிரிழப்பு
ஹெலிகாப்டர் சம்பவத்தில் தங்களுடைய 6 சேவையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வீழ்ந்த ஹெலிகாப்டர்கள்
கிழக்கு உக்ரைனிய பகுதியில் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருந்த 2 ஹெலிகாப்டரில் பணியாற்றிய 6 உக்ரைனிய சேவையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.
பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த Mi-8 ஹெலிகாப்டர்களுக்கு செவ்வாய்க்கிழமை என்ன நடந்தது என்பது குறித்து எந்தவொரு அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Twitter
இது தொடர்பாக உக்ரைனிய ராணுவம் டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பக்முட் நகரில் திட்டங்களை செயல்படுத்தி வந்த போது 6 வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன்ஸ்கா பிராவ்தா கூற்றுப்படி, இரண்டு ஹெலிகாப்டர்களும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது, ஹெலிகாப்டர்கள் கிடந்த இடத்தில் இருந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
Reuters
விமானப்படை செய்தி தொடர்பாளர் யெவன் ரகிதா இது தொடர்பாக வழங்கிய தகவலில், உயிரிழந்தவர்கள் அனைவரும் உக்ரைனிய அதிகாரிகள் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |