புடினால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் குடும்பத்துக்கே ஆபத்து: பதுகாப்பு நிபுணர்
புடினால் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கே ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புடினால் உயிருக்கு ஆபத்து
பிரித்தானிய பாதுகாப்பு நிபுணரான மைக்கேல் கிளார்க் என்பவர், புடினால் ஜெலன்ஸ்கிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஒரு நபர் ஜெலன்ஸ்கி என்று கூறும் கிளார்க், புடின் போன்ற ஒருவரை எதிர்த்து நின்றதால், தங்கள் வாழ்நாள் முழுவதுமே அவரது குடும்பத்துக்கே ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புடின் பழிவாங்கும் குணம் கொண்டவர் என்று கூறும் கிளார்க், ஜெலன்ஸ்கி குடும்பம் எங்கு சென்றாலும், எப்படியாவது அவர்களைத் தேடிச் சென்று அவர்களைக் கொல்ல புடின் தரப்பு முயற்சி செய்யும் என்றும் கூறியுள்ளார் கிளார்க்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |