சாலையை கடந்த பெரிய முதலை: வனத்துறை அதிகாரிகளின் விளக்கம்
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருங்களத்தூர் அருகே பெரிய முதலை சாலையை கடந்து செல்லும் காட்சியை பார்த்து பலர் அதிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சாலையை கடந்த முதலை
சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
இந்த புயலானது 14 கி.மீ வேகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியது.
இது தொடர்பில் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்கள்.
வனத்துறை அதிகாரிகள் கூறியது,
சென்னையில் நீர்நிலைகளில் சில மக்கர் ரக சதுப்புநில முதலைகள் இருகின்றது. இவைகள் மனிதர்களை விட்டு தள்ளியிருக்க விரும்பும் ஒரு உயிரினமாகும்.
வீடியோவில் காணப்படும் இந்த முதலை ஒரு நீர்நிலையிலிருந்து வெள்ளம் காரணமாக வெளியில் வந்திருக்கலாம்.
Many are tweeting about this video.There are a few mugger crocodiles in several of the water bodies in Chennai. These are shy elusive animals and avoid human contact. This one has come out as the water has overflown due to massive rains under the impact of #CycloneMichuang please… https://t.co/qY8aTEdfaw
— Supriya Sahu IAS (@supriyasahuias) December 4, 2023
சூறாவளியின் தாக்கத்தில் பாரிய மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், நீர்நிலைகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம்.
வெளியில் வந்த முதலையை தூண்டப்படாமல் இருந்தால், மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. இது தொடர்பில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
மேலும் வனவிலங்கு பிரிவினர் இதனால் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |