புலம்பெயர்ந்தோர் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கி விபத்து! வெளியான தகவல்
துனிசியா கடலில் புலம் பெயர்ந்தோர் பயணித்த படகு விபத்தில் சிக்கியதில் குறைந்தது 43 பேர் கடலில் மூழ்கியதாக துனிசியன் Red Crescent தெரிவித்துள்ளது.
புலம் பெயர்ந்தோர் படகில் லிபியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து புறப்பட்ட படகு, எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகிலிருந்து 84 பேரை கடற்படையினர் மீட்டுள்ளதாகவும், 43 பேரை காணவில்லை என மனிதாபிமான அமைப்பான துனிசியன் Red Crescent தெரிவித்துள்ளது.
இத்தாலிய அதிகாரிகள் அளித்த தகவலின் படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 6,700 புலம் பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 19,800 புலம்பெயர்ந்தோர் வந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.