ஆயிரக்கணக்கான புலம்பெயர் சுகாதார ஊழியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட பிரித்தானியா
எந்த தவறும் செய்யாத நிலையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் சுகாதார ஊழியர்களை நாட்டைவிட்டு வெளியேற பிரித்தானியா உத்தரவிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கைவிடப்பட்ட நிலைக்கு
தொடர்புடைய ஊழியர்களுக்கு வேலைக்கான அனுமதியை அளித்திருந்த நிறுவனங்கள் மீது உள்விவகார அமைச்சரகம் அமலாக்க நடவடிக்கையை முன்னெடுத்த நிலையிலேயே ஆயிரக்கணக்கான அப்பாவி புலம்பெயர் சுகாதார ஊழியர்கள் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்றில், சுமார் 18,000 பவுண்டுகள் கட்டணமாக செலுத்தி இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும் அவரது சகோதரியும் பிரித்தானியாவில் சுகாதார ஊழியர் பணியைப் பெற்றுள்ளனர்.
ஆனால் 60 நாட்களுக்குள் வேறு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ள வேண்டும், அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியதை அடுத்தே அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர்.
22 வயதான Zainab மற்றும் அவரது சகோதரர் 25 வயதான இஸ்மாயில் ஆகிய இருவரும் உறவினர்களிடம் இருந்து கடனை வாங்கியே, நல்ல எதிர்காலம் கருதி பிரித்தானியாவில் வேலைக்காக வந்துள்ளனர்.
ஆனால் உறுதி அளித்திருந்தது போன்று அவர்களுக்கு தங்கும் இடம் அளிக்கப்படவில்லை என்பதுடன், உரிய வேலையும் அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்கள் கட்டணம் செலுத்திய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் புதிய நிறுவனத்தில் வேலை உறுதி செய்ய வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 300 நிறுவனங்களுக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
60 நாட்கள் விதி
ஆனால் இதுவரை எவரும் வாய்ப்பளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. இவர்களைப் போன்று 3,081 புலம்பெயர் சுகாதார ஊழியர்கள் கடந்த ஓராண்டில் இதுபோன்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 94 சதவிகித ஊழியர்களும், நம்பி பணம் செலுத்திய ஆட்சேர்ப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகவே கூறப்படுகிறது. பிரித்தானிய நிர்வாகத்தால் அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த 60 நாட்கள் விதியை பிரித்தானிய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும், வெறும் 60 நாட்களில் புதிய வேலையை தேடுவது என்பது முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டு பாலகிருஷ்ணன் பாலகோபால் என்ற சமூக ஆர்வலர் மனு அளித்துள்ளார்.
புலம்பெயர் மக்கள் பலர் போலி நிறுவனங்களை நம்பி ஏமாறுவதாகவும், சிலருக்கு விசாவை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |