ஆப்கானிஸ்தானிற்கு திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் புதிய அச்சம்
பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் மீண்டும் ஐ.எஸ் அமைப்பு ஒருங்கிணையும் ஆபத்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
ஈர்க்கப்பட வாய்ப்பு
ஜனவரி முதல் சுமார் 2.6 மில்லியன் ஆப்கான் மக்கள் திரும்பி வந்துள்ளனர். இதில் பல தசாப்தங்களாக வெளிநாடுகளில் கழித்தவர்கள் அல்லது முதல் முறையாக ஆப்கானிஸ்தானிற்கு திரும்புபவர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் Khorasan என்ற ஐ.எஸ் அமைப்பால் பலர் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்கள் தங்கள் கிளர்ச்சியில் வென்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பெரிதும் மேம்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகமாக வேரூன்றியுள்ள Khorasan அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி, தாலிபான் ஆட்சிக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
ஐ.நா மன்றம் ஜூலை மாதம் விடுத்துள்ள எச்சரிக்கையில், Khorasan உள்ளிட்ட அமைப்புகளால் மத்திய ஆசிய மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.
வேலையில்லாமல்
2000 வீரர்களுடன் செயல்படும் Khorasan அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யா, ஈரான் மற்றும் பாகிஸ்தானில் கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானில் எந்த பயங்கரவாத அமைப்புகளும் செயல்படவில்லை என்றே தாலிபான் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானின் 48 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர், மேலும் 15-29 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் வேலையில்லாமல் உள்ளனர்.
இப்படியான மக்கள் Khorasan உள்ளிட்ட அமைப்புகளால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம். ரஷ்யா வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் 20 வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 23,000 போராளிகள் உள்ளனர். ஆனால், ரஷ்யா மட்டுமே தாலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த ஒரே ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |