இத்தாலியின் முக்கிய நகரை உலுக்கிய சம்பவம்: அப்புறப்படுத்தப்பட்ட சிறார் பாடசாலை, முதியோர் இல்லம்
இத்தாலியின் மிலன் நகரில் ஆக்ஸிஜன் உருளைகளுடன் சென்ற வேன் ஒன்று நெருப்பு கோளமாக மாறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆக்ஸிஜன் உருளைகளுடன் வேன்
இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அருகாமையில் உள்ள சிறார் பாடசாலை மற்றும் முதியோர் காப்பகம் ஒன்றும் பொலிசாரால் வெளியேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மிலன் நகரம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
Credt: Rex
மிலன் நகரின் தென்கிழக்க்கே அமைந்துள்ள போர்டா ரோமானா பகுதியில் உள்ளூர் நேரப்படி நண்பகலில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் ஒருவர் கைகளில் தீக்காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவலில், ஆக்ஸிஜன் உருளைகளுடன் வேன் ஒன்று தெருமுனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், திடீரென்று அந்த வேன் வெடித்ததில், அதன் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்களும் நெருப்பு பற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
@getty
அத்துடன், அருகாமையில் உள்ள குடியிருப்புக்கும் மருந்தகம் ஒன்றிற்கும் அந்த தீ பரவியுள்ளது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அப்பகுதியில் இருந்து மக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரும் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டு, துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
@Rex