நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்.. தரையில் விழுந்த வெடித்து சிதறிய திகில் காட்சி! அனைவரும் பலி
ரஷ்யாவில் இராணுவ போக்குவரத்து விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து வெடித்து சிதறிய பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது.
Kubinka விமான தளத்திற்கு அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலே Ilyushin Il-112V இராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முன்னதாக, Zhukovsky சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Ilyushin Il-112V இராணுவ விமானம், Kubinka விமான தளத்தில் தரையிறங்கியுள்ளது.
பின் சோதனை ஓட்டத்திற்காக Kubinka விமான தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட நான்கு நிமிடங்களில் விமானத்தின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக குழுவினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Latest: A new Russian Ilyushin IL-112V aircraft currently in development & undergoing flight testing has crashed on the outskirts of Moscow, following a fire.
— Alex Macheras (@AlexInAir) August 17, 2021
Unbelievably, the final moments of the flight were filmed.
pic.twitter.com/gpuDcC75bg
இதனையடுத்து, நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம், Kubinka விமான தளத்திற்கு அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
விமானத்தில் பயணித்த 3 பேரும் உயரிழந்ததாக ரஷ்யா அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.