மாஸ்கோ குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் முக்கிய தலைவர் மரணம்
ரஷ்ய ராணுவத்தின் ரசாயன ஆயுதப் பிரிவின் தலைவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
குண்டுவெடிப்பு
செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்கிழக்கு மாஸ்கோவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கட்டிடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிரியக்க ஆயுதப் பிரிவின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் Igor Kirillov என தெரிய வந்தது. மற்றொருவர் அவரது உதவியாளர் என கூறப்பட்டுள்ளது.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் கிரெம்ளின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, மாஸ்கோவில் இத்தகைய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மிக மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரி இவர் ஆவார்.
வெடிக்கும் சாதனம்
ரஷ்யாவின் விசாரணைக்குழு கூறுகையில், "மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் டிசம்பர் 17ஆம் திகதி காலை, குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிக்கும் சாதனம் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து Kirillov கொல்லப்பட்டார்" என தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் பல சன்னல்கள் உடைத்து, முன்பக்க கதவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |