போர்க்கப்பல் மூழ்கியதற்கு தொடரும் பதிலடி.. பயங்கர ஆயுதங்களால் உக்ரைனை அழித்தொழிக்கும் ரஷ்யா!
முக்கிய போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களால் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல்களை ரஷ்ய நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் லிவிவ் நகரங்களில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் கீவ் நகரில் இரவு முதல் சைரன் ஒலி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மிகவும் துல்லியமாக தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி கீவில் உள்ள ராணுவ தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயிரம் டன் எரிபொருளுடன் கடலில் மூழ்கிய கப்பல்! காரணத்தை கூறிய அமைச்சர்
மிக துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் மூலம் ராணுவ உபகரணங்கள் கிடங்கு மற்றும் ஆயுத கிடங்குகள் உட்பட 16 உக்ரேனிய தளங்களை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Igor Konashenkov தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உக்ரைனின் தெற்கில் உள்ள Mykolaiv நகரில் இருக்கும் ராணுவ உபகரணங்கள் பழுதுபார்க்கும் தளத்தையும் தாக்கி அழித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
???Explosion was heard in #Kyiv during an air raid warning alert this morning #Ukraine #Russia #Putin pic.twitter.com/InwSrcxxzh
— Слава Україні?? (@ignis_fatum) April 16, 2022
மேலும், இந்த தாக்குதலில் கார்கிவின் Izyum நகரில் உக்ரேனிய SU-25 ரக போர் விமானமும் தாக்கப்பட்டதாக ரஷ்ய தெரிவித்துள்ளது.