இலக்குகளை ரஷ்யா நிச்சியம் அடையும்...அதுவரை சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும்: லாவ்ரோவ் கருத்து!
ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனை கருவியாக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் பயன்படுத்த நினைப்பதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்ய இடையிலான போர் நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட நீடித்து இருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டப்படி நடைப்பெற்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம் பேசிய போது தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கை அதன் இலக்குகளை நிச்சியமாக அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசிய செர்ஜி லாவ்ரோவ், நேருக்கு நேர் சமாதான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைப்பெறாவிட்டாலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் தினசரி அடிப்படையில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்படுவதாக லாவ்ரோவ் தெரிவித்தார்.
உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை சரியாக நடைப்பெறவில்லை என்றாலும், அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எப்போதும் ஆதரவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: டான்பாஸில் மக்களை துடைத்தெறிய ரஷ்யா விரும்புகிறது: ஜெலென்ஸ்கி குற்றசாட்டு!
மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் உண்மையாகவே உதவ நினைத்தால், முதலில் கீவ்-வில் தற்போது நடைப்பெற்று வரும் ஆட்சிக்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.