டான்பாஸில் மக்களை துடைத்தெறிய ரஷ்யா விரும்புகிறது: ஜெலென்ஸ்கி குற்றசாட்டு!
உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸை மக்கள் இல்லாத வெற்றுப் பகுதியாக மாற்ற ரஷ்யா நினைப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் ரஷ்ய போரானது அந்த நாட்டின் கிழக்குப் பகுதிகளான டான்பாஸை நோக்கி திசை திரும்பி இருக்கும் நிலையில், அந்தப்பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது.
இந்தநிலையில், நேற்று தலைநகர் கீவ்-வில் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்து வருகிறது என குற்றங்சாட்டியுள்ளார்.
மேலும் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை தொடர்ச்சியாக குண்டுகள் வீசி சிதைத்தது போல தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டான்பாஸையும் தினமும் குண்டுகள் வீசி சிதைக்க ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உணவு பொருள்கள் தீரப்போகிறது: உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!
ரஷ்ய படையெடுப்பாளர்கள் தங்களது திட்டங்களை ஒரளவு உணர முடிந்தால் கூட, மரியுபோலில் செய்தது போல, முழு டான்பாஸையும் கற்களாக மாற்றுவதற்கு போதுமான பீரங்கிகள் மற்றும் விமானங்களை வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.