பால் வியாபாரி செய்த மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி
பால் வியாபாரி ஒருவர், பாலில் எச்சில் துப்பும் காட்சி கமெராவில் சிக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலில் எச்சில் துப்பிய நபர்
உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில், முகமது ஷரீஃப் என்பவர் பால் விநியோகம் செய்துவருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று, லாவ் ஷுக்லா என்பவருடைய வீட்டுக்கு பால் விநியோகம் செய்த ஷரீஃப், பால் பாத்திரத்துக்குள் எச்சில் துப்பியுள்ளார்.
Breaking 🚨 Milkman Pappu aka Md Sharif caught on CCTV spitting into milk before delivering it to a Hindu house in Lucknow 👀
— Hopes (@Hopes_times) July 6, 2025
After he rang the bell, he looked around and then spit into the can.
Sharif has veen ARRESTED. pic.twitter.com/rjMAenaq8J pic.twitter.com/i3C4lgCJPu
தற்செயலாக CCTV கமெராவில் இந்த காட்சியைக் கண்ட ஷுக்லா பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிசார் உடனடியாக ஷரீஃபை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில், சமீபத்தில் கரும்புச்சாறு விற்கும் ஒருவர் கரும்புச்சாற்றில் சிறுநீர் கழித்தது, ரொட்டி தயாரிக்கும் ஒருவர் ரொட்டியில் எச்சில் துப்பியது முதலான பல விடயங்கள் உணவு பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஷரீஃப் பாலில் எச்சில் துப்பிய விடயமும் சேர்ந்துகொள்ள, உணவு பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |