பிரான்சில் இளைஞரைக் கொன்ற பொலிசாருக்கு குவியும் நிதி: அதிர்ச்சி தகவல்
பிரான்சில் இளைஞரைக் கொன்ற பொலிசாருக்காக நிதி திரட்டப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், இதுவரை அவருக்காக ஒரு மில்லியன் டொலர்கள் நிதி திரண்டுள்ள விடயம் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
17 வயது இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார்
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பிரான்சிலுள்ள Nanterre என்னுமிடத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறி, பொலிசார் அந்தக் காரை ஓட்டிய Nahel (17) என்னும் இளைஞரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
Juan Medina/Reuters
இந்த சம்பவம் பிரான்சில் வன்முறைக்கு வழிவகுக்க, Nahelக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய போராட்டக்காரர்கள் கடைகளை சேதப்படுத்துவது, தீவைப்பு போன்ற செயல்களில் இறங்க, பல்லாயிரக்கணக்கான பொலிசார் நாடெங்கும் குவிக்கப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
Vous hébergez une cagnotte de la honte @gofundme . Vous entretenez une fracture déjà béante en participant au soutien d’un policier mis en examen pour homicide volontaire. Clôturez !
— Olivier Faure (@faureolivier) July 2, 2023
இளைஞரைக் கொன்ற பொலிசாருக்காக நிதி
இந்நிலையில், வலது சாரி அரசியல்வாதியான Marine Le Penஉடைய முன்னாள் ஆலோசகரான Jean Messiha என்பவர், சமூக ஊடகம் ஒன்றில் Nahelஐக் கொன்ற பொலிசாருக்கு ஆதரவாக நிதி திரட்டத் துவங்கியுள்ளார்.
அந்த நிதி, நேற்றைய நிலவரப்படியே ஒரு மில்லியன் டொலர்களைக் (963,000 யூரோக்கள்) கடந்துவிட்டதால், ஆளும் அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கொலை செய்த பொலிசார் ஒருவருக்கு ஒரு கூட்டத்தினர் ஆதரவு அளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இது அவமானம் என்றும், Socialist Party கட்சியின் தலைவரான Olivier Faure விமர்சித்துள்ளார்.
அரசியல்வாதிகள் பலரும், Jean Messihaவின் இந்த மோசமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |