காந்தம் மூலம் ஒட்டிக் கொண்ட கண்ணிவெடிகள்: 27 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல் மீது தாக்குதல்
Mine attack on Ship carrying 27 indian in hormuz: 27 இந்திய மாலுமிகளுடன் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்
அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அனுமதியின்றி பயணம் செய்த கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதே போல ஈரான் துறைமுகத்தில் இருந்து செல்லும் அல்லது ஈரானிய துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது.

இந்திய மாலுமிகளின் கப்பல் மீது தாக்குதல்
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பனாமா நாட்டின் கொடியுடன் எம்.டி லூயிஸ்-1 என்ற கச்சா எண்ணெய் கப்பல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்த கப்பலானது சென்று கொண்டிருந்த போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது 27 இந்திய மாலுமிகள் கப்பலில் இருந்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் சென்று கொண்டிருந்த போது காந்தம் மூலம் ஒட்டிக் கொண்ட வெடிக்கக்கூடிய வகையிலான கண்ணிவெடி மூலம் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலின் என்ஜின் அறைகள் தீப்பிடித்து எரிந்தது. தீயை கப்பலில் இருந்த பணியாளர்கள் போராடி அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.