அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் சதி.. நீதிமன்றத்துக்கு செல்வேன்: மாடுபிடி வீரர் அபிசித்தர் பரபரப்பான குற்றச்சாட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று காலை 7 மணிக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது மாலை 6 மணி கடந்தும் நடைபெற்ற போட்டியில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
17 காளைகளை அடக்கி சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் என்பவர் இரண்டாவது இடம் பிடித்தார். இவருக்கு பைக் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், நான் தான் அதிக மாடுகளை பிடித்தேன், சதி நடந்துள்ளது என்று கூறி பரிசை வாங்காமல் அபிசித்தர் புறக்கணித்து சென்றார்.
ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி.., நேரில் நன்றி தெரிவித்த உதயநிதி
அமைச்சரின் சதி
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாடுபிடி வீரர் அபிசித்தர், "நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அபிசித்தர். கடந்த 2023 -ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகளை பிடித்து முதலிடம் பிடித்தேன். ஆனால், அப்போது 26 மாடுகளை தான் பிடித்தேன் என்று அறிவித்து அரசியல் செய்தார்கள்.
தற்போது முதலிடம் பிடித்துள்ள கார்த்திக் ரெக்கமண்டில் வந்தார். அவர் மூன்று பேட்ஜில் மாடுகளை பிடித்துள்ளார். நான் இரண்டு பேட்ஜில் மாடுகளை பிடித்துள்ளேன். அவர் மட்டும் எப்படி மூன்று பேட்ஜில் பிடிக்கலாம் என்று கேட்டால் திட்டி அடித்து வெளியே விரட்டி விட்டார்கள்.
நானும், அவரும் 17 மாடுகளை பிடித்திருக்கிறோம். ஆனால், கமிட்டியாளர்கள் இதனை அறியாமல் அவருக்கு முதல் பரிசை கொடுத்துவிட்டார்கள்.இது முழுமையாக அமைச்சரின் சதி. இதில் அரசியலை இழுத்து விட கூடாது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்.
நான் நீதிமன்றத்திற்கு செல்வேன். வீடியோவை பார்த்து கண்டறிந்து யார் முதலிடம் என்று அதே இடத்தில் மேடை போட்டு அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் மூர்த்தி, "ஜல்லிக்கட்டு போட்டியில் 2 -ம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. நாங்கள் யாரையும் ஏற்ற இறக்கமாக பார்க்கவில்லை. அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம் தான். தகுதியானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |