இரவு முழுவதும் நீடித்த விசாரணை... அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன்
கடந்த 2007ல் நடந்த வழக்கு தொடர்பாக, இரவு முழுவதும் விசாரிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை நிறைவு
குறித்த தகவலை அவரது சட்டத்தரணி சரவணன் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
@vikatan
திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவை கடந்து நீடித்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து குடியிருப்புக்கு திரும்பிய அவருக்கு, செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் 4 மணியளவில் மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அளித்துள்ளது.
மனித உரிமை மிறலில் அமலாக்கத்துறை
இது தொடர்பில் சட்டத்தரணி சரவணன் தெரிவிக்கையில், 72 வயதான நபரை, அவரது உடல்நலனையும் கருத்தில் கொள்ளாமல், விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மிறலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையும் மீறி அமலாக்கத் துறை மனிதத்தன்மையற்று செயல்பட்டுள்ளது. 2007ல் நடந்த வழக்குக்கு 2023ல் விசாரணை செய்வோம் என்கிறது அமலாக்கத் துறை. இது அமலாக்கத் துறை அலுவலகமா அல்லது சித்ரவதை கூடமா என்று தெரியவில்லை என சரவணன் விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |