அணுசக்தி தாக்குதலுக்கு சாத்தியமில்லை, ஆனால்..ரஷ்யா குறித்து உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறிய விடயம்
உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய வீரர்களும் வெளியேறும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
பிராந்திய தலைநகரான கெர்சனை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து உக்ரைன் தலைவர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த நிலையில், பிரித்தானியாவுக்கு வருகை தந்த உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் வோலோடிமிர் ஹாவ்ரிலோவ் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஊடகத்திடம் பேசினார்.
அவர், உக்ரைனின் ஒவ்வொரு அங்குலத்தில் இருந்தும் புடினின் வீரர்கள் வெளியேறும் வரை, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கப்போவதில்லை என கூறினார்.
மேலும் பேசிய வோலோடிமிர் ஹாவ்ரிலோவ் , 'ரஷ்யா இந்தப் போரில் ஒரு இடைநிறுத்தம் செய்வதில் மீண்டும் ஒருங்கிணைக்க, தாய்நாட்டில் இருந்து அதிகமான மக்களைக் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளது. அதுதான் கனவு. அதனால்தான்..நிறுத்த எங்களுக்கு உரிமை இல்லை. நாம் முன்னேற வேண்டும்.
ரஷ்யா அவர்கள் நாட்டில் Black Swan-ஐ எதிர்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். அது கிரிமியாவுடன் எங்களின் வெற்றிக்கு பங்களிக்கும். Black Swan நிகழ்வு ரஷ்ய படைகளின் அழிவை விரைவுபடுத்தும் மற்றும் உக்ரேனிய வெற்றியை விரைவுபடுத்தும். அணுசக்தி தாக்குதலுக்கான வாய்ப்பு இன்னும் சாத்தியமில்லை. ஆனால் கீவ் அனைத்து நிகழ்வுகளுக்கும் தயாராகி வருகிறது' என தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனில் உள்ள சமூகத்தினுள் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது, அது என்னவென்றால் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டுக்கு முன்பாக உக்ரேனியப் படைகள் மீண்டும் கிரிமியாவுக்கு வரக்கூடும் என்றும், வசந்தகாலத்தில் ரஷ்யாவின் படையெடுப்பு முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.