ஒலிம்பிக் பதக்கத்தை தொட்டு பார்த்து ரசித்த சச்சின்! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட மீராபாய் சானு
இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த சாதனை மங்கை மீராபாய் சானுவின் பதக்கத்தை சச்சின் தொட்டுப் பார்த்து ரசித்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் தொடரில், இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 48-வது இடத்தை பிடித்தது.
இதையடுத்து பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களை பலரும் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரை சந்தித்து பேசியுள்ளார்.
Loved meeting @sachin_rt Sir this morning! His words of wisdom & motivation shall always stay with me. Really inspired. pic.twitter.com/Ilidma4geY
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 11, 2021
அப்போது சச்சின் அவரை பாராட்டியதோடு, அவர் கூறிய வார்த்தைகள் அந்தளவிற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் சச்சின் மீராபாயின் அந்த வெள்ளிப் பதக்கத்தை தொட்டு பார்த்து ரசிப்பது போன்று இருக்கிறது.
இதை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரந்து வருகின்றனர்.