நாளை வானில் தோன்றும் Pink Moon எனும் அதிசயம்: வெறும் கண்களால் பார்க்கலாம்
Pink Moon எனும் அதிசய முழுநிலவு இந்தியாவில் நாளை காலை தோன்றுகிறது.
PINK MOON
சந்திரன் பூமியில் இருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும். அப்போது மிகச்சிறிய முழு நிலவு தோன்றும்.
வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் PINK MOON என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.
அதாவது, வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது.
வெறும் கண்களால் பார்க்கலாம்
இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிப்பதால் PINK MOON என்ற பெயர் வந்தது. மேலும் இதனை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.
இந்த நிலவு இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் தோன்றவுள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |