ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்... ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புதிய திட்டம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டது போன்று, அமைதி திட்டத்தின் ஒருபகுதியாக உக்ரைனும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என ட்ரம்பின் சிறப்பு தூதுவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்
உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்காவால் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான தளபதி Keith Kellogg தெரிவித்துள்ள கருத்து நேட்டோ அமைப்பையே பீதியில் தள்ளியுள்ளது.
ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும், மேற்கு உக்ரைனில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைமை தாங்கக்கட்டும் என்றும், அதனால் ரஷ்யாவின் நகர்வுகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆனால், தளபதி Keith Kellogg தெரிவித்துள்ள இந்த திட்டத்தால், ரஷ்யா ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதியில் 20 சதவீத நிலத்தை புடினின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஒப்புக்கொள்வதாகும்.
இரு தரப்பினருக்கும் இடையில் உக்ரேனியப் படைகள் இருக்கும், அவை தோராயமாக 18 மைல் அகலமுள்ள இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்குப் பின்னால் செயல்படும்.
ரஷ்யா ஒருபோதும்
மேலும், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியப் படைகள் எந்த காரணம் கொண்டும் புடினின் ராணுவத்தை தூண்டிவிடக் கூடாது. மேலும், போர் நிறுத்தத்தை அமுல்படுத்தும் வகையில் உக்ரைனால் பல படைகளை நிறுத்த முடியும் என்றும் தளபதி Keith Kellogg தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஒருபக்கம் ரஷ்ய மண்டலம் அமைவது போல, பிரெஞ்சு மண்டலம், மற்றும் பிரித்தானிய மண்டலம், ஒரு அமெரிக்க மண்டலம் என உருவாக்கப்படும். சிக்கல் மிகுந்த மேற்கு உக்ரைனில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இராணுவம் களமிறங்க வேண்டும்.
அமெரிக்க மண்டலம் உருவாக்கப்பட்டாலும், அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைனில் களமிறக்கப்படமாட்டார்கள் என்றே தளபதி Kellogg தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த மாதம் ரஷ்யாவின் Sergey Lavrov தெரிவிக்கையில், எந்த காரணத்தின் அடிப்படையிலும் உக்ரைனில் நேட்டோ நாடுகளை களமிறக்க ரஷ்யா ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |