இந்தியாவுக்கு வந்துக்கொண்டிருந்த கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!
அரபிக் கடல் வழியாக இந்தியாவை நோக்கி வந்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக சேனல் 12 நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேசமயம் ஈரான் ஏவுகணை தான் கப்பல் மீது தாக்கியதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தான்சானியாவிலிருந்து இந்தியாவை நோக்கி அரபிக் கடல் வழியாக பயணித்து வந்துக்கொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீதே இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பல் சேதமடைந்துள்ளதாகவும், தாக்குதல் குறித்து கப்பலின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், கப்பல் தொடர்ந்து இந்தியாவை நோக்கி பயணிக்கட்டும் என அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா சென்றடைந்தவுடன் அங்கு கப்பல் பழுது பார்க்கும் பணி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த கப்பலின் பெயர் வெளியாகவில்லை.
மேலும், சம்பவம் குறித்து இஸ்ரேல் இராணுவம் விசாரணை நடத்தி வருதவாக அந்நாட்டு ஊகடம் தெரிவித்துள்ளது.