பனாமாவின் MSC Sariska V சரக்கு கப்பல் மீது தாக்குதல்: பொறுப்பேற்றுக் கொண்ட IRGC
பனாமா சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல்
திங்கட்கிழமை பனாமாவை சேர்ந்த சரக்கு கப்பலான MSC Sariska V மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை(IRGC) பொறுப்பேற்றுள்ளது.
ஈரானிய ஊடகங்கள் வாயிலாக IRGC வெளியிட்ட அறிவிப்பில், பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக MSC Sariska V மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு சொந்தமான Lian Star என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாகவே IRGC படையின் தற்போதைய தாக்குதல் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளது.
MSC Sariska V மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முதலில் பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக பிரிவினரால் தகவல் வெளியிடப்பட்டது.
அதன்படி, ஈரான் தென் கிழக்கே சுமார் 40 கடல் மைல் தூரத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று MSC Sariska V கப்பலின் வலது புறத்தில் தாக்கியதாகவும், இதனால் கப்பலில் மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே தொடர்ச்சியான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் காரசாரமான உரையாடல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையை நீடிக்க செய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |