உக்ரைனின் கலாச்சார அரண்மனையை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: பரபரப்பு வீடியோ காட்சி!
கார்கிவ் நகரில் உள்ள உக்ரைனின் கலாச்சார அரண்மனையை ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி அழித்தது தொடர்பான வீடியோ வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் மூன்று மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் தங்களது இருப்புகளில் இருந்து பின்வாங்கி, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதி நகரங்களான டான்பாஸின் மீது கவனம் செலுத்து வருகின்றன.
இந்தநிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரின் லோசோவா பகுதியில் உள்ள கலாச்சார அரண்மனை மீது ரஷ்ய ராணுவம் பயங்கரமான ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
The ?? are deliberately terrorizing the civilian population of Ukraine. Unique shots from surveillance cameras: a Russian missile hitting the Palace of Culture in Lozova, Kharkiv Region. 7 local residents were injured, including 1 child. #airdefenseforukraine. We need it today! pic.twitter.com/5luJWy3s7f
— Defence of Ukraine (@DefenceU) May 20, 2022
இந்த தாக்குதலில் உக்ரைனின் கலாச்சார அரண்மனை முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், 1 குழந்தை உட்பட உள்ளூர் பொதுமக்கள் 7 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்று உக்ரைனுக்கு விமானப்படையே தேவை என்ற கருத்தையும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அந்த ட்விட்டர் பதிவின் முலம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனின் பாதுகாப்பு வல்லுநர் Rob Lee தெரிவித்த தகவலில், உக்ரைனின் கலாச்சார அரண்மனையை ரஷ்ய ராணுவம் Kh-22 ஏவுகணை முலம் தாக்கி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: அவுஸ்திரேலியா தேர்தல் முடிவுகள்: புதிய பிரதமராகிறார் அந்தோனி அல்பானீஸ்
இதனைத் தொடர்ந்து, உக்ரைனின் கலாச்சார அரண்மனை மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.