ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்... கொத்தாக 43 பேர்கள் மாயம்: நீதி கோரும் குடும்பத்தினர்கள்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் மெக்சிகோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 43 பேர் மாயமான சம்பவம் தற்போதும் மர்மமாகவே உள்ளது.
எதிர்த்து கேள்வி கேட்டவர்கள்
மெக்சிகோவின் Ayotzinapa என்ற நகரில் அமைந்துள்ள ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரி மாணவர்களே மாயமான அந்த 43 பேர்களும். கடும் போக்கு இடது சாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தும் அந்த கல்லூரியில், மாயமான 43 பேர்களும் எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
@getty
சம்பவத்தன்று தொடர்புடைய 43 மாணவர்களும் அருகாமையில் உள்ள நகருக்கு சென்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். மட்டுமின்றி, 1968ல் நடந்த Tlatelolco படுகொலையின் 46வது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் மெக்சிகோ சிட்டி வரையில் பயணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
உண்மை பின்னணி
Tlatelolco படுகொலை சம்பவத்தில் போராட்டத்தில் குதித்த நூற்றுக்கணக்கான மாணவர்களை ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளது. 43 மாணவர்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ள சம்பவத்தில், அவர்களின் பெற்றோர்கள் தற்போதும் உண்மை பின்னணியை அறிந்துகொள்ள காத்திருக்கின்றனர்.
Credit: Government of Guerrero
ஆனால், அதில் மூவரின் எச்சங்கள் மீட்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 40 பேர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |