காணாமல் போன காதுகேளாத பெண்... துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுப்பு
கொலம்பியா நாட்டில் மாயமான பெண் ஒருவர் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.
பொலிசாருக்கு அதிர்ச்சி
பிண வாடை வீசுவதாக குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் அளித்துள்ளதை அடுத்து, குடியிருப்பு ஒன்றை சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 24 வயதான Jennifer Velandia என்பவர் அக்டோபர் 31ம் திகதி திடீரென்று காணாமல் போனார்.
காதுகேளாத நிலையில் இருக்கும் அவர் தொடர்பில் குடும்பத்தினர் கவலையுடன் தேடி வந்தனர். இந்த நிலையில், காது கேட்கும் கருவிகள் இல்லாமல் அவர் வெளியே சென்றிருப்பார் எனில், கண்டிப்பாக அவர் தொலைந்திருப்பார் என்பது உறுதி என உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 10 நாட்களுக்கு பிறகு மிக மோசமான நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட பொலிசார், அவரது முன்னாள் காணவரை கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி, யோபாலில் உள்ள உறவினர்களிடம் பணம் கேட்டு வேலாண்டியாவின் அலைபேசியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு பயந்து வேலாண்டியாவின் குடுபம் 51 பவுண்டுகள் அனுப்பியுள்ளனர்.
கழுத்தை நெரித்து
ஆனால் வேலாண்டியாவின் மோட்டார் பைக்கையும் அவர் 141 பவுண்டுகளுக்கு விற்றுள்ளார். பின்னர் கை கால்களை கட்டி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதன் பின்னர் சடலத்தை அவர் துண்டு துண்டாக வெட்டியிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.
மாயமாகியுள்ள அந்த நபரை கைது செய்யும் பொருட்டு தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு சுமார் 8,816 பவுண்டுகள் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் 10ம் திகதி அந்த நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிரது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |