பிரித்தானியாவில் காணாமல் போன பெண் குழந்தை: 25 வயது பெண் கைது
பிரித்தானியாவின் தெற்கு மான்செஸ்டர் பகுதியில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் குழந்தை உயிரிழப்பு
கடந்த வியாழக்கிழமை பிரித்தானியாவின் ஃபாலோஃபீல்டில் உள்ள பிளாட் லேன் பகுதியில் குழந்தை ஒன்றின் நலம் தொடர்பாக பொலிஸார் மற்றும் அவசர படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ குழுவினர் தீவிரமாக போராடியும் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் கைது
பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது குழந்தையை பராமரிப்பதில் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தையின் இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் அதை புரிந்து கொள்வதற்காக பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |