மாயமான பிரபல கோடீஸ்வரர்... பயங்கரமான ஆதிவாசிகளுடன் காணப்பட்டதால் அச்சம்
பிரபல கோடீஸ்வர குடும்பமான ராக்ஃபெல்லர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு நாள் திடீரென மாயமானார்.
பின்னர், வீடியோ ஒன்றில், மனிதர்களைத் தின்னும் பயங்கர ஆதிவாசிகளுடன் அவர் இருக்கும் காட்சிகள் வெளியாக, அவர் கொல்லப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது.
மாயமான பிரபல கோடீஸ்வரர்...
பிரபல அமெரிக்க கோடீஸ்வரக் குடும்பமான ராக்ஃபெல்லர் குடும்பத்தைச் சேர்ந்த மைக்கேல் ராக்ஃபெல்லருக்கு உலகம் சுற்றுவதில் அலாதி பிரியம்.

முன் மக்கள் சென்றிராத இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட மைக்கேல், 1961ஆம் ஆண்டு, மனிதவியல் ஆய்வாளரும் நெதர்லாந்து நாட்டவருமான ரீன் வாஸ்ஸிங் என்பவருடன் சிறு படகொன்றில் நெதர்லாந்தின் நியூகினியா என்னுமிடத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, படகு பழுதாகியுள்ளது.
நான் சமாளித்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன் என்று கூறிய மைக்கேல் தண்ணீரில் இறங்கி நீந்தத் துவங்கியுள்ளார்.
அவர் தொலைவிலிருந்த ஒரு தீவை நோக்கி நீந்த, அதற்குப் பிறகு மைக்கேலை யாரும் பார்க்கவேயில்லை. அவருடன் சென்ற ரீன் மறுநாள் மீட்கப்பட்டுள்ளார்.
மைக்கேலை ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் தேடியும் அவரோ, அவரது உடலோ கிடைக்கவில்லை.

மைக்கேல் என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. 1964ஆம் ஆண்டு, இறந்துவிட்டதாக சட்டப்படி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்கேல் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை ஆய்வு செய்யும்போது, அதில் ஒரு வித்தியாசமான காட்சி தென்பட்டது.
அதில், அஸ்மாத் என்னும் ஆதிவாசியினர் சிலர் தங்கள் எதிரிகளுடன் போருக்குச் செல்லும் காட்சிகள் இருந்தன.

அவர்களிடையே, முற்றிலும் வித்தியாசமாக, ஒரு வெள்ளையின மனிதரும் காணப்பட்டார். அவரைப் பார்க்க அப்படியே மைக்கேல் போலவே இருந்தது.
ஆக, மைக்கேல் அஸ்மாத் ஆதிவாசியினருடன் சேர்ந்து வாழத்துவங்கியிருக்கலாம் என்ற கருத்து உருவானது.
அதே நேரத்தில், ஆவணப்படம் எடுக்கும் சிலர், அஸ்மாத் ஆதிவாசிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தித்த ஒருவரை சந்தித்துள்ளார்கள்.

அதேபோல, வேறு சிலர், அஸ்மாத் கிராமம் ஒன்றைச் சேர்ந்த சிலரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்கள். அந்த இருவருமே ஒரே விடயத்தைக் கூறியுள்ளார்கள்.
நெதர்லாந்து ராணுவம் தங்கள் ஆதிவாசிக் கூட்டத்தில் சிலரைக் கொன்றுவிட்டதாகவும், ஆகவே, பழிக்குப் பழியாக, தங்கள் தீவுக்கு நீந்தி வந்த மைக்கேலை தாங்கள் கொன்று தின்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக, மைக்கேல் மனிதர்களைக் கொன்று தின்னும் அஸ்மாத் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டுவிட்டாரா, அல்லது அவர்களில் ஒருவராக மாறிவிட்டதால் அவர் வெளி உலகின் பார்வையில் படாமலே மறைந்துவிட்டாரா என்பது இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |