ரேடாரிலிருந்து மாயமான விமானம் கண்டுபிடிப்பு! எங்கே.. எப்படி இருந்தது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
ரஷ்யாவில் ரேடாரிலிருந்து மாயமான சிறிய ரக விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவசரசேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை ரஷ்யாவின் Yamalo-Nenets பிராந்தியத்தில் இரண்டு நபர்களுடன் சிறிய விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது.
காட்டுத் தீ ஏற்பட்ட இடத்தை அந்த விமானம் கண்காணித்து வந்த போது ரேடாரிலிருந்து மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் மாயமானத்தை தொடர்ந்து அப்பிராந்தியத்தில் மீட்பு படையினர் தேடுதல் பணிகளை தொடங்கினர்.
இந்நிலையில், மாயமான விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணித்த இருவரும் நினைவுடன் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது Krasnoselkup மாவட்டத்தில் உள்ள Tolka கிராமத்திற்கு கொண்டு சொல்லப்பட்டதாக அவசரசேவைகள் தெரிவித்துள்ளன.