முதல் டி20 சதம் விளாசி தொடரைக் கைப்பற்றிய கேப்டன்! நியூசிலாந்து பரிதாப தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
அபோட் 3 விக்கெட்டுகள்
பே ஓவலில் நடந்த கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது. டிம் செய்பெர்ட் (Tim Seifert) 35 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசினார். அபோட் 3 விக்கெட்டுகளும், ஹேசல்வுட், பார்ட்லெட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 18 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மார்ஷ் சதம்
கடைசிவரை களத்தில் நின்ற மிட்சேல் மார்ஷ் (Mitchell Marsh) 52 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் விளாசினார். இது அவரது முதல் டி20 சதமாகும்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Australia take the three-match series 2-0 👏 #NZvAUS pic.twitter.com/mahBO5oSDe
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 4, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |